Tuesday, July 21, 2009

தேடல்














"இப்படிலாம் கிறுக்கிட்டு இருக்கறதுக்கு என்ன அர்த்தம்?

நிச்சயம் யாரோட தாக்கமோ இருக்கு உங்கிட்ட‌..
யாரு அது ? சொல்லு.."

"ஹே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல..

சும்மா ஏதோ தோணினத வெட்டியா இருக்கறப்போ
டைப் அடிச்சு வச்சிட்டு இருக்கேன்

அவ்ளோ தான்.. வேற எதுவும் இல்ல"

என் கிறுக்கல்களின் ஒரே விளக்கம்
இன்று வரை

ரொம்பவும் தான்
நினைப்பு
எனக்கு

தாக்கம் எதுவும் இன்றியே
என்னால்
எழுத கூடும்
என்று எண்ணியது

கூடவே
தாக்கம் இன்றி
எழுதுதலே எளிமை
என்று எண்ணியது

அறியாமை
என் அறியாமை!

லேசாக பறக்கும்
பட்டாம் பூச்சிகள்
கண்டேன்
எப்பொழுதும்
ஒரு
பூத கண்ணாடியில்!

கருப்பு வெள்ளை
வண்ணங்கள்
கொள்ளை
கொள்கிறேன்
இப்பொழுதும்
ஒரு
கலீடியோஸ்கோப்பில்!

ம்ம்ம்...
பேய் மழை கூட‌
பெரிதாக தெரியவில்லை
பெண்மையின் சாரல்
இன்றும் எனக்கு புலப்படவில்லை

இருந்தும்
அத்தனை சுகம்
மூன்று வருடங்கள் முன்
கனவில்
நான் துவங்கிய இந்த‌
தேடல்

தேடுவது
எதுவென்று
இன்று வரை
தெரியாமலே!

Friday, June 19, 2009

மூன்று நிமிடங்களில்
முடிந்தது
மூச்சு முட்ட கொடுத்த‌
முப்பது அவசர முத்தங்கள்

மீண்டும்
விரைந்தேன்
புகையிலையின்
புனிதம் பேசியபடி

Monday, June 01, 2009

நான்கு சுவரின்
இடையே
இருவர் மட்டும்!

ஒரு மூலையில்
சாய்ந்தபடி அவள்

இரு அடி தூரத்தில்
அந்நிய‌னாய் நான்

அ‌‌னைத்தும்
அவ‌ள் பார்வையில்
என் க‌ண்க‌ள் த‌விர‌

முடிவில்லா
மெள‌ன‌ம்

முடிவில்லா
பயணம்

எதை கொண்டு
க‌லைக்க‌லாம்?

கூடுத‌ல் வ‌ண்ண‌ம்
க‌ண் இமையில்

கூடுத‌‌ல் அழ‌கு - அவ‌ள்
க‌ன்னி ம‌யில்

இயற்கையா? செய‌ற்கையா?
பெண் கூந்த‌ல் ப‌ற்றிய‌
அதே 'மண' குழ‌ப்ப‌ம்!

துப்பட்டாவின்
நூல் நுனியில்
சிறைப்பிடித்திருந்தாள்
அவள் கை விரலினை

தெரிந்திருந்தால்
நிச்ச‌ய‌ம்
செய்திருக்கும்
அதே த‌வ‌றினை
என் விர‌ல்க‌ளும்

மெல்ல‌
சாய்ந்தேன்
அதே சுவரில்

இரண்டடி இடைவெளி
இன்னும் குறையாமல்

இன்னமும் காத்திருந்தேன்
அவ‌ள் முத‌ல் பார்வைக்காக‌!

மிதந்து செல்வது போல்
தொடர்ந்த சிலிர்ப்பு
தடாலென தரையிற‌ங்கியது

இரண்டாய்
பிளந்தது
எதிர் சுவர் !

Monday, May 18, 2009

அதிக கவலை
இனி இல்லை
தாம‌த‌மாய்
நான்
வீடு திரும்பினாலும்

ஆம்!

கோபமாய்
முறைத்தபடியே தான்
நிற்கிறாள்
இப்போதும்
என் தேவதை

ஒரு மாற்றம்

தாவி வந்து
அணைத்துக் கொள்ள‌

பிறந்திருக்கிறாள்
என் வாழ்வில்

ஒரு
புது தேவதை!


Tuesday, May 12, 2009

"Go ahead. Pick one. Lets see what you got"

You are the guiding star of his existence.

"Thats a good one. How about trying one more?"

Too much of a good thing is WONDERFUL.

"Not bad. Why dont you go ahead and see how far it goes?"

Romance comes into your life this year in a very unusual sort of way.

"Thats more like it. We seem to be hitting on something here. One last one?"

Ahem!

"Ok. After mine. Go ahead read this. Lets see what is in store for me."

An innovative way to express your love is the way to go.

"Perfect. Now your last one. I got this one for you."

Marry me.

"And please say Y E S"

Thursday, April 30, 2009

துள்ளல்
விளையாட்டு
காதல்
ஏக்கம்
வெறுமை
அமைதி
இசை
உற்சாகம்

அனைத்தும்
ஒரு நிமிடமே

மாறியபடியே
அலைரிசைகள்!

Tuesday, April 07, 2009

நன்றி உனக்கு

விடியலை
காண‌
விழித்திருந்தேன்
சிவந்திருந்த‌
விழிகளுடன்!

Monday, April 06, 2009

எதில்
அதிக வலி?

அவளுக்கு
என் வலி
தெரியாமல்
போவதா?

என் வலி
தெரிந்தும்
அவள்
தெரியாதது போல்
போவதா?

Wednesday, April 01, 2009

இரு இருக்கைகள்
இடைவெளியே
இருவரிடையும்

அவளை
பார்த்தபடியே
நான்

என்னை
கண்டுகொள்ளாமலே
அவள்

மெல்ல அவள்
அருகே
இட‌ம் பெய‌ர்ந்தேன்

இம்மி அள‌வே கூட‌
சட்டை செய்யவில்லை
இப்பொழுதும்

அதிக சிரமத்துடன்
முடிவு செய்தேன்

என் சிறுவிரல்
கொண்டு
அவள் கைகள்
மெல்ல
வருடினேன்

சட்டென‌
சிறைபிடித்தாள்
என் விரலினை

பின்
அதட்டினாள்
என்னை
...அழகு மழலையில்!

Sunday, March 29, 2009















தவற விட்ட‌
வாய்ப்புகள்

பின்
நினைவில் நிறுத்தி

திருத்தி எழுதிய‌
வார்த்தைகள்

....ம்
கற்பனையிலே முடிகிறது
வாழ்க்கை!

Friday, March 27, 2009

தீர்மானமாய்
இருந்தேன்.

எத்தனை முறை தான்
தத்தளிப்பது?

வேண்டாம்
இந்த விவகாரமே

தெள்ள தெளிவாய்
இருந்த‌து
மனம்
அக்க‌ண‌ம்

குளத்தில் அன்று
சலசலப்பேதும் இல்லை

கல் எறிய‌ப்பட
அதிக நாட்கள்
பிடிக்க‌வில்லை

ஆராய்ந்த காரணங்களில்
ஆர்வம் இல்லை

சலசலப்பில்லா மனதில்
சலனமே!

காரியங்கள் மெல்ல கலைய‌
கற்பனைகள் கருவுற்றன‌

மீண்டும்
நீந்தி தான்
பார்ப்போமே

ஒரு
குறுகுறுப்பு

நடந்து
சென்றேன்
என்
இலக்கினை நோக்கி

...மெல்ல‌
நனைத்தேன்
பாதங்களை!

Tuesday, March 24, 2009

கனவோ?
அல்ல..காலை பனி

மேலாடை?
ஓ..மேக மூட்டம்

தலை துவட்டியும்
ஈர பதம்
காற்றினில்

இல்லை
இன்று
எவையும்!

வேர்வையில் முடியும்
காலை துயில்

கரிசனம் இல்லாது
கொட்டியபடி
க‌த்திரி க‌திர்க‌ள்

இரவினில் மறைந்தும்
அழைத்து செல்ல மறந்த‌
உஷ்ணம்

ச்சே...

காத்திருக்கிறேன்
மீண்டும்
ஒரு
மழை காலத்திற்காக!

Tuesday, March 17, 2009


















திடீர் மழை
பெய்யும்
ஒவ்வொரு முறையும்
சொல்வாய்

ஹே!
எதோ
நல்லது நடக்கப் போகிறது

சிரித்து விட்டேன்
முதல் முறை!

ஹே!
லேசா தூறுதில்ல‌

இப்போதே
கொடுத்த
ஷாப்ப‌ர்ஸ் ஸ்டாப் கூப்ப‌னில்
அதிர்ஷ்டம்
என‌க்கு தான்

ஹே!
அங்க உன் ஆஃபிஸ் பக்கம்
மழை எதாவது பெய்யுதா?

இல்ல‌...
ஒரு மொக்க ஸ்கிரிப்ட்
எக்ஸிக்யூட் பண்றேன்
வேலை செய்யுமா?

ஹே!
இப்ப‌டி
மேக‌மூட்ட‌மா இருக்கே
கொஞ்ச‌ம் தூறுனா தான் என்ன!

முக‌வ‌ரி தேடி
ப‌டி ஏறி இற‌ங்கிய‌ ப‌டி நாம்

குடையேதும் இல்லை
இருவரிடமுமே!

பாரு லேசா
தூறுது!

ஸோ...
இப்போ நீ
லேட்டாக வீட்டுக்கு போனாலும்
அம்மா திட்டவே மாட்டாங்க!

நானும் என் ப‌ங்கிற்கு
என்றாவ‌து!

உனக்கிருந்த
ஒரே
தவிப்பு


சென்னையில்
ஒரு
மழைக்காலம்!


ஆம்!
உன்
அதிர்ஷ்டம்
மழை அல்ல‌
திடீர் மழை ம‌ட்டுமே!


இதென்ன
சிறுபிள்ளைத‌ன‌ம்!

விளையாட்டிற்கு தானே
சொல்கிறாய்!

எப்போதும்
இதே பேச்சு தானா!

கேட்கவும் இல்லை
எதையும்
சொல்லவும் இல்லை

ஹே!
நாம் பேசிய‌
முதல் முறை
ஞாபகம் இருக்கா?

ம்...
என்றேன்
இருபதாவது முறையாக‌

அதை கொஞ்சம் சொல்லேன்


இக்கதையை கேட்பதில்
அப்படி என்ன உனக்கு ஆர்வம்?

தெரியவில்லை
எனக்கு!

பல முறை
யூகிக்க முயற்சித்திருக்கிறேன்

ஒரு வேளை
அன்று
மழை ஏதும் பெய்திருந்ததா

ஆர்வமாக யோசித்ததில்
அன்று அடித்த நல்ல வெயில் தான்
சட்டென நினைவில்!

ச்சே!

A1+ இரத்தம் வேண்டும்
தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா?
MMM செல்ல‌‌முடியுமா உட‌னே?

ஆஃபிஸ் இன்ட்ரானெட் பார்த்து
அவசரமாக அழைத்திருந்தாய்

நம்
முதல்
உரையாடல்

நன்றி சொல்ல‌
நீ தேர்ந்தெடுத்த‌
அடுத்த நாள்
தேனீர் இடைவெளி

அது
நம்
முதல்
சந்திப்பு

வேறு ஏதேனும்
நான் ம‌ற‌ந்தேனா!

ச்சே...
இத்த‌னை முறை
உன்னிட‌ம் போய்
கேட்டேனே!

என் ச‌லிப்பையும்
சேர்த்து
நீயே ச‌லித்துக் கொண்டாய்!

திடீர் மழை போல்
வேறேதேனும்
குருட்டு நம்பிக்கை உண்டோ!

இதையும்
கேட்கவில்லை

என்ன நாள் அது?

ஜுன் பதிமூன்று

கிழமை?

புதன்

நேரம்?

மதியம் இரண்டு இருக்கும்

நீ எங்கு இருந்தாய்?

ம‌திய‌ உண‌விற்காக‌
ஹோட்ட‌லில்

நான்?

தோழியின் திருமணத்திற்காக‌
ஊரில்

எந்த ஊர்?

நாமக்கல்

அங்கு என்ன சிறப்பு தெரியுமா?

மேட்டூர் அணை

உன்னை போய் கேட்டேனே!

நீர்வீழ்ச்சி?

ஆ...அது ஒக்க‌னேக்க‌ல்

அப்படியா! சரி நீயே சொல்லேன்

சரி போகிறது போ!

அந்த ஊரின் சிறப்பு

அங்கு
அடிக்கடி
பெய்யும்

.
.
.
.
.
திடீர்
மழையே!

அன்றே
ஆரம்பித்தது
இந்த நம்பிக்கை!

பின்
நீ பேசியது ஏதும்
சரியாக காதினில்
விழவில்லை!

நீயும்
விலகியே சென்றாய்
மரத்தடிக்கு


மேட்டூர் அணை
திறந்த உற்சாகமோ

ஒக்கனேக்கல்
நீர் வேழ்ச்சியின்
உக்கிரமமோ!

சில நிமிடங்கள்
பின்

சிலிர்த்தபடி
விரைந்தேன் நானும் மரத்தடிக்கு
இப்போதே துவங்கிய‌
திடீர் மழையை
உணர்ந்தவனாய்!

Thursday, March 12, 2009

அரசியல்
வ‌ழிப்ப‌றி
ப‌ஸ் எரிப்பு

ச‌ல‌ன‌மின்றி
வாசித்தேன்

சட்டென
சோர்ந்தேன்
கடைசி பக்கத்தில்

இன்று
உன் ராசிக்கு
சோர்வு!

Wednesday, February 11, 2009

ஏழு முறை
அலறினேன்

என் தலை தட்டக்கூட‌
எந்த அலட்டலும்
இல்லை
உன்னிட‌ம்

உனக்கெல்லாம்
எதற்கு நான்

ச்சே..
சலிப்பே மிச்சம்

எனக்குள்
ஒரு
திடீர்
புது வரவு

அட!

என்
செல்ல சிணுங்கலுக்கு
சட்டென விழித்துக்கொண்டாயே

புது கனிவுடன்
ஒரு பார்வை வேறு

ம்ம்..

நாளை முதல்
அவளே
பொறுப்பேற்கட்டும்
நீ விழிப்பதற்கு!

Tuesday, February 10, 2009













கண்க‌ள்
மெல்ல சுருக்கி

போர்வையின் பிடியில்
கொஞ்சம் மீண்டு

லயித்திருந்த கனவினில்
லேசாக விலகி

கொண்டிருந்த‌ காதலில்
கொஞ்சம் சிலிர்த்து

தலையணை பக்கம்
கைகள் துழவி

காகிதம் பேனா
தேடி எடுத்து

அப்போதைய கனவினை
கண்களில் நிறுத்தி

சாய்ந்தபடியே அதனை
மெல்ல கிறுக்கி

ஏதோ சாதித்துவிட்ட‌
மகிழ்வில்

மீண்டும்
கண் மூடினேன்

உன் நினைவினில்
உறக்கம் தேடினேன்!

Sunday, February 08, 2009













தெரிய‌வில்லை
எதுவென்று

நடு கோடாக‌
இல்லாமல்
வலப்பக்கம் துவங்க‌
திருத்தப்பட்ட கூந்தல்

நேர் வரிசையில்
நில்லாமல்
புன்னகையில் பூக்கும்
தெற்றுப்பல்

தெரிய‌வில்லை

இவ்விரண்டில்
எதில் அதிகம்
மயங்கினேன்
என்று!

Friday, February 06, 2009

மூச்சு முட்டியது.

த‌ன்னிச்சையாய்
மேல் எழும்பி

த‌ற்காலிக‌மாய்
மூச்சிழுத்து

கொஞ்சமே
ஆசுவாசுபடுத்தி

மீண்டும்
மூழ்கினேன்

..உன் நினைவுகளில்!



















ஜ‌ன்ன‌லோர‌ இருக்கை
ரயிலின் தடதடப்பு

ஒளிந்திருந்த‌ சூரிய‌ன்
ஒட்டியிருந்த‌ வெளிச்சம்

ப‌ரிச்ச‌ய‌மில்லா ப‌ச்சை
ப‌டித்திருக்க‌ பார்த்திப‌ன் க‌ன‌வு

ஆழ்ந்து ர‌சிக்க‌
ஆன‌ந்த‌மாய் க‌ளித்திருக்க‌

ஆயிர‌ம் ஆயிர‌ம்
ஆவ‌ண‌ங்க‌ள் இருந்தும்

ஏனோ மூடியப‌டியே
கண்கள்!

Tuesday, January 27, 2009

நிமிடத்துக்கு நிமிடம்
நிறம் மாறினேன்

இருந்தும் ஏசவில்லை
எவரும்

திசைகள் புரிந்தனவே!

Thursday, November 27, 2008



















எப்படி இருக்கும்
இந்த முதல் சந்திப்பு?

ஆர்வமா
இல்லை பதட்டமா?

தெரியவில்லை எனக்கு

முதல் முறை
அவள் வீடு தேடி நான்

மீண்டும்
மெல்லிய தூரல்

சாலையோர மரங்கள்
மர நிழலில் நிறுத்தினேன் காரை

இரு அடிகளுக்கு பின்
ஏனோ திரும்பினேன்

மஞ்சள் நிற மலரொன்று
மஞ்சத்தில் சாய்வது போல்
வந்திறங்கியது
கார் முன் கண்ணாடியில்

மனம் குதூகலித்தது

அவசர ஒப்பனைகள்
பின்
அழ வைத்தேன்
அழைப்பு மணியை

ஆட்கள் எவரும்
அதிகம் இல்லா அவ்வேளையிலும்
ஆயிரம் கண்கள் என்னை பார்த்தனவோ!

மெல்ல‌ திறந்தாள் கதவினை
வெள்ளை தேவதை

தெள்ள தெளிவாக
தொலைந்து போனேன்
அப்போதே

"ஹே ஹாய்! வெல்கம்!
பைனலி எங்க வீட்டுக்கு வந்துட்டியா!
வா வா! கம் இன்"

அவ‌ள் இன்னிசையில் சிலாகித்தபடி
'இதோ' என்றேன்.

முப்பது நிமிடம்

பின்
ஒரு ஒன்றரை மணி நேரம்

பின்
ஒரு இருபது நிமிடம்

விடை பெறுவதாக நான் அறிவித்த நேரங்கள்.

இறுதியாக‌
இரண்டு மணி நேரம்
இருபது நிமிடங்கள் பின்

மீண்டும்
அவள் விட்டு வாசலில் நான்

லேசான‌ இருட்டு
சாலையில் மட்டுமே

ஆட்கள் எவரும்
அதிகம் இல்லா இவ்வேளையிலும்
ஆயிரம் கண்கள் என்னை பார்க்காதோ!

ஏங்கியது ம‌ன‌ம்
இம்முறை.

ஈரம் இன்னும் குறைய‌வில்லை
பெய்த மழையில்

சாலையிலும்
சோலையிலும்

எனக்குள்ளே சிரித்தபடி
நடந்தேன் காரை நோக்கி

அதில்
அழ‌கிய‌ பூ கோல‌ம்
முன் கண்ணாடி முழுவதும்
இப்போது!
"I will come into your life and I'll sweep you off your feet"
- வாரணம் ஆயிரம்

Friday, October 10, 2008













அழிக்கும் போதே
புரிந்தது

வரைவதை காட்டிலும் கடினம்
வரைந்த கோலத்தைக் கலைப்பதே!

Wednesday, September 24, 2008












இரவுகள் எல்லாம்
இனி இனிதே

ஆம்

உறக்கம் எல்லாம்
இனி எனதே!

Wednesday, August 27, 2008



















அடுத்தடுத்த வரிசையில்
ஷெல்லி
தாகூர்
டால்ஸ்டாய்

ஆழ்ந்த உறக்கம் க‌லைக்க‌
ஆள் இன்றி

அர‌சாங்க‌ நூல‌க‌த்தில்!

Tuesday, August 19, 2008

I Day Thoughts


















Independence Day Celebrations
Sweets distribution
Bored Faces
... in the Jail !

-o-

Yes! All Indians are
my brothers and sisters.
So where are
my long lost siblings?
In Pakistan?

-o-

The sound of
guns firing and
people screaming
1919!

Culmination into
one loud silence
1947 - Independence!

Thursday, August 14, 2008

Shortest Path
was
also
the Best Path

Until,
everyone thought so
... in Traffic!

Friday, July 18, 2008

200!


















Writer's block...

Sometimes!

But my love for you...

Always!

Wednesday, July 09, 2008

என் தேவதை
பிறந்த நாள்
இன்று

ஆர்ச்சீஸ்
வாசகங்கள் முன் நான்

கையில் இருந்தது என்னவோ
கொஞ்சம் சில்லரையே

அழகழகாக அத்தனை
அட்டைகள்

அத்தனையும் வாங்கி கொள்ளவே
ஆசை

இருபது நிமிட தேடலுக்கு பின்
தெளிந்தது
இதுவே என்று

கடற்கரை மணலில்
கைகோர்த்தபடி
நடந்த ஒரு சிறுவனும் சிறுமியும்

விலை 40 ரூபாய்

வெளியே விரைந்தேன்

மிதிவண்டியை மிதித்து
மறுநிமிடமே
நின்றேன் அவ‌ள் முன்

வா
என்றேன்

அவளையும் சுமந்து
மிதிவண்டியை மீண்டும்
மிதித்தேன்

பாரம் ஏதும் கூடியதாக தெரியவில்லை!

ஆர்ச்சீஸ் வாசல்

பின்
ஆர்ச்சீஸ் வாசகங்கள் முன் நாங்கள்

ஆச்ச‌ர்ய‌ம் நிறைந்த அவ‌ள் க‌ண்க‌ள்
ஆராய்ச்சியில் ஈடுப‌டும் முன்
நீட்டினேன் அக்க‌ண‌மே

முன் தேர்வு செய்திருந்த
வாழ்த்து அட்டையினை

'உன‌க்காக‌ நான் வாங்க‌ நினைத்த‌
வாழ்த்து இதுவே
ஆனால்...

என்னால் வாங்க‌ இய‌ன்ற‌து
இதுவே'

உள் மறைத்து வைத்திருந்த‌
ஒற்றை ரோஜாவினை நீட்டி

காதினில்
மெல்ல கிசுகிசுத்தேன்
'பிறந்த நாள் வாழ்த்துக்கள்!'

ஆஹா தருணங்கள்
ஓரிரண்டிற்கு பின்

விரைந்தோம் வெளியே
கடற்கரை மணலில்
கைகோர்த்தபடி
கோலங்கள் வரையவே!

Tuesday, June 24, 2008














கோவிலுக்கு போகிறாயா?
எனக்காகவும் வேண்டிக் கொள்வாயா?

நிச்சயம்!

உனக்காக
வேண்டிக் கொள்கிறேன்

அப்படியே
உன்னையே வேண்டும் என்று
எனக்காகவும்
வேண்டிக்கொள்ளவா?

Wednesday, June 11, 2008

ஒவ்வொரு கோணம்
ஒவ்வொரு அழகு

இயற்கை வரைந்த‌
அதிசய ஓவியம்

மரக்கிளை பின்
ஒளிந்த வானம்

மாசற்ற மாற்றம்
கொண‌ர்ந்த மழை மேகம்

எட்டிப்பார்க்கும்
குட்டி பெண்ணின் முகம்

ஒட்டிக்கொள்ளும்
அவள் உற்சாகம்

அத்தனையும் கலைந்தது
உடனே

மழை செய்த‌
புது குளத்தில்
மீண்டும்
சாரல் விழுந்ததும்!












பாதம் பட்டு
கலங்கின‌
சிறு குளம்

சாலை வழியே நீ நடக்கையில்

மேகம் தொட்டு
குலுங்கின‌
இள மனம்

உன் பார்வை என்னை கடக்கையில்!

Thursday, June 05, 2008














பிடித்திருந்தது

அதிரடியும்
ஆர்ப்பாட்டமும்
அளவில்லாமல்!

கூட்டம் கூட்டமாக‌
மக்கள் அலை மோதிய‌
குற்றால காட்டருவி

ஆனாலும்
அதிகம் பிடித்திருந்தது

அமைதியும்
ஆனந்தமும்
அள்ள அள்ள

செல்லும் வழியில்
எங்கோ மறைந்திருந்த
மனிதர் நடமாற்றம் ஏதும் இல்லா
பெயர் தெரியாத அந்த சிற்றருவியே!

Thursday, May 29, 2008














கீழப்பாவூர் கிராமம்

பேருந்து நிறுத்த‌
நிழற்குடையில்
காத்திருந்தனர்
அவனும்
அவ‌ளும்

நேர‌ம் போக‌ போக‌
காத்திருந்து
வ‌ராத‌ பேருந்து ப‌ற்றி
எதேச்சையாக ஆரம்பித்த
உறையாடல்

சட்டென
ஒரு பரிச்சயம்
இருவரிடையேயும்

அவளுக்கு
அவனை பிடித்திருந்தது

அவனுக்கு
அவளை ரொம்பவே பிடித்திருந்தது

மெல்ல மெல்ல‌
பேசிக்கொண்டிருந்ததில்
பேருந்து வருவது எப்பொழுது என்பதில்
அதிக ஆர்வம்
தெரியவில்லை இப்பொழுது

இருவரும்
வெவ்வேறு ஊர் செல்ல‌வே
உத்தேசம்

நீ என் ஊருக்கு வந்திருக்கிறாயா?

என்னுடன் என் ஊருக்கு வர விருப்பமா?
ஏதேதோ என‌
முதன் முறை சந்தித்துக்கொண்டவர்கள் போல் இல்லாமல்
இயல்பான பேச்சு

ரயில் சினேகம்
மாதிரி இதை என்னவென்று சொல்வது

பேருந்து சினேகமா?
நாம் இன்னும் பேருந்தில் போகவேயில்லையே

அதுவும் இருவரும்
வெவ்வேறு பேருந்திற்க‌ல்ல‌வா
காத்திருக்கிறோம்

நிழற்குடை சினேகம் என்று சொல்லலாமா?

மொக்கையாக ஏதோ பேசி
அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்

இரண்டு மணி நேரத்தில்
முதல் 60 நிமிட மெளனத்திற்கும்
அடுத்த 60 க்கும் தான்
எத்தனை மாற்றம்

காத்திருப்பது
அவ்வளவு சிரமாக இல்லை இப்பொழுது

நீங்க வாங்க போங்க‌
ஆனது சீக்கிரமே
நீ வா போ

கெமிஸ்ட்ரி பற்றி
புதிய அர்த்தம்
கண்டுகொண்டனர் இருவரும்

தூரத்தில்
புழுதியை கிளப்பியபடி
வந்து கொண்டிருந்தது ஒரு பேருந்து

சட்டென மலர்ந்த முகம்
மாறியது சீக்கிரமே

கேட்டிராத ஒரு
கிராமத்தின் பெயர்
சுமந்திருந்தது பேருந்து

எத்திசையில் செல்லும்?

சேர்ந்தே செல்லலாமா
அடுத்த ஊர் வரை?

அதன் பின் என்ன?

கேள்விகள் பல

பதில் கிடைத்தது ஒன்றிற்கே

பேருந்து அவள் ஊர் வரையே செல்லும்
அவன் ஊர் செல்லவில்லை

-o-

பேருந்தில் மீண்டும்
அதே வேகம்
எடை ஏதும் கூடாம‌லே

நிழற்குடையில் மீண்டும்
அதே உற்சாகம்
தடை ஏதும் இல்லாமலே

-o-